தொலைதூர மற்றும் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உள்ள வீரர்களுக்குக் குடி நீரை வழங்குவதற்காக வேண்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒரு பெயர்த்தகு உப்புநீக்க அமைப்பினை உருவாக்கியுள்ளது.
இந்த அமைப்பு SWaDeS (கடல் நீர் உப்புநீக்க முறை) என்று அழைக்கப்படுகிறது.
இது DRDO அமைப்பின் கீழ் ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தால் உருவாக்கப் பட்டது.
இந்த அமைப்பை கைமுறையிலான செயல்முறையிலும் இயந்திரம் மூலம் இயக்கக் கூடிய முறையிலும் இயக்க முடியும்.
இது கடல் நீர் மற்றும் உப்புநீரை குடிநீராக சுத்திகரிக்கக் கூடியது.
இந்த அமைப்பு கடலோரப் பகுதிகள், உயரமான பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப் பட்ட இராணுவ மையங்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.