TNPSC Thervupettagam

பெருநகரங்களில் காற்றுப் பதனிகளின் பயன்பாடு

September 19 , 2025 15 hrs 0 min 20 0
  • ஏழு பெருநகரங்களில், சராசரியாக ஒரு நாளைக்கு 4.4 மணிநேரம் என்ற பதிவுடன் சென்னையில் அதிகபட்ச காற்றுப் பதனி (ஏர் கண்டிஷனர்) பயன்பாடு பதிவாகி உள்ளது.
  • சென்னையில் சுமார் 23% வீடுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட காற்றுப் பதனிகள் உள்ளன என்ற நிலையில் இது தேசிய சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
  • சென்னையில் அதிக குளிர் பதனூட்டி நிரப்பு விகிதம் உள்ளது என்பதோடு 41% என்ற தேசிய சராசரிக்கும் மேலாக, 50 சதவீதத்திற்கும் அதிகமான காற்றுப் பதனி அலகுகள் ஆண்டுதோறும் மீண்டும் நிரப்பப்படுகின்றன.
  • ஒவ்வொரு மறு நிரப்பலுக்கும் சென்னையில் சராசரியாக 2,300 ரூபாய் செலவாகிறது என்ற நிலையில் இது நாட்டிலேயே அதிகபட்சமாகும்.
  • மிகவும் பொதுவான குளிர்பதனப் பொருளான HFC-32 (ஹைட்ரோ ஃப்ளூரோ கார்பன்-32), கார்பன் டை ஆக்சை டை விட 675 மடங்கு அதிக புவி வெப்பமடைதல் ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் குளிர்பதனூட்டி பொருட்களின் கசிவு 52 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான உமிழ்வுகளுக்குப் பங்களித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்