பெருந்தடுப்புப் பவளத் திட்டுகளில் 4வது உலகளாவிய மாபெரும் பவளப் பாறை நிறமாற்ற நிகழ்வுகள்
March 16 , 2024 424 days 359 0
ஒரு மாபெரும் பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு ஆனது, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருந் தடுப்புப் பவளத் திட்டினை (GBR) சூழ்ந்துள்ளது.
இந்தப் பவளத் திட்டானது இத்தாலியை விட பெரிய பரப்பளவில் பரவியுள்ளது.
பருவநிலை மாற்றம் என்பது பெருந்தடுப்புப் பவளத் திட்டு மற்றும் உலகின் பெருங் கடல்களில் உள்ள இதரப் பவளப்பாறை சூழல் அமைப்புகளுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
பெருந்தடுப்புப் பவளத் திட்டானது 2,300 கி.மீ. வரை நீண்டுள்ளது மற்றும் சுமார் 3,000 தனித்தனி திட்டுகளால் ஆனது.
கடந்த காலங்களில் பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு ஆனது 1998 ஆம் ஆண்டில் தொடங்கி 2002, 2016, 2017, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நிலையில், 2024 ஆம் ஆண்டில் சமீபத்திய பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு பதிவானது.
தற்போதைய பவளப்பாறை நிறமாற்ற நிகழ்வு ஆனது கடந்த எட்டு ஆண்டுகளில் பதிவான ஐந்தாவது நிறமாற்ற நிகழ்வைக் குறிக்கிறது.