பெருந்தடுப்பு பவளப் பாறைப் பகுதியில் வாழும் மீன்களின் வண்ணம் குன்றுதல்
March 28 , 2022 1367 days 635 0
பருவநிலை மாற்றத்தின் காரணமாக, கடல்கள் வெப்பமடைகின்றன.
இதனால் பவளப் பாறைகள் தொடர்ந்து வெளுக்கப்படுவதால் ஆஸ்திரேலியாவின் பெருந்தடுப்பு பவளப் பாறைப் பகுதியில் வாழும் மீன்களின் வண்ணம் மங்குவதற்கும் அவற்றின் நிறத்தை இழப்பதற்கும் அவை காரணமாகின்றன.
குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த டாக்டர் ஹெமிங்சன் இந்த ஆய்வறிக்கையினை வெளியிட்டார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையானது, மீன்களின் நிறம் மற்றும் அவற்றின் வாழ்க்கைச் சூழலில் காணப்படும் மாற்றங்களைக் கண்காணித்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப் படி, மீன்களின் நிற வேறுபாடு என்பது உள்ளூர் சூழல் அமைப்புடன் இணைக்கப் பட்டுள்ளது.