தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தியது.
இந்த விரிவாக்கம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15.3 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கும்.
இத்திட்டம் சென்னை திருவான்மியூரில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப் பட்டு தொடங்கப்பட்டது.
நகர்ப்புறங்களில் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் மூலமாகவும், கிராமப் புறங்களில் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலமாகவும் காலை உணவு வழங்கப்படும்.
இத்திட்டம் முதலில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது, பின்னர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.
இந்த விரிவாக்கத்திற்கான ₹217.63 கோடி உட்பட மொத்தம் ₹724 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.