பெரும் பன்றி வளைக்கரடி/கிரேட்டர் ஹாக் பேட்ஜர் குறித்த முதல் அறிவியல் அறிக்கை
June 18 , 2026 44 days 129 0
காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் ஆனது, பெரும் பன்றி வளைக்கரடி/கிரேட்டர் ஹாக் பேட்ஜர் (ஆர்க்டோனிக்ஸ் காலரிஸ்) குறித்த தனது முதலாவது அறிவியல் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெரும் பன்றி வளைக்கரடி/கிரேட்டர் ஹாக் பேட்ஜர் என்பது வடகிழக்கு இந்தியா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படும் நடுத்தர அளவிலான, இரவில் இரைதேடும், அனைத்துண்ணி மற்றும் வளைதோண்டும் பாலூட்டியாகும்.
இதன் பன்றி போன்ற மூக்கு மற்றும் தோண்டும் நடத்தை காரணமாக அசாமில் இது உள்ளூரில் 'மதி கஹோரி' (நிலப் பன்றி) என்று அழைக்கப்படுகிறது.
இந்த இனம் IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை I-இன் கீழ் இது மிக உயர்ந்த சட்டப் பாதுகாப்பைப் பெறுகிறது.
மண்ணைத் தோண்டி புரட்டுவதன் மூலம், இந்த விலங்கு மண்ணில் காற்றோட்டத்திற்கும், ஊட்டச்சத்து சுழற்சிக்கும் மற்றும் பிற உயிரினங்களுக்கான நுண்-வாழ்விடங்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது.