பெரு நிறுவன சமூகப் பொறுப்புகள் (CSR) அறிமுகத்தின் 10 ஆண்டு நிறைவு
November 19 , 2024 282 days 268 0
பத்தாண்டுகளுக்கு முன்பு, பெரு நிறுவன சமூகப் பொறுப்பினை (CSR) சட்டப்பூர்வமாக கட்டாயப்படுத்திய முதல் நாடாக இந்தியா மாறியது.
2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 135 பிரிவு ஆனது, CSR பொறுப்புகளை நிர்வகிக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளது.
தேசிய CSR இணைய தளத்தின் படி, 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரை, 1.84 லட்சம் கோடி CSR நிதி வழங்கப்பட்டுள்ளது.
CSR என்பது பெருநிறுவனங்களானது சமூகம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் பங்களிப்புகள் மூலம் சமூகத்தின் நலனுக்காக நேரடியாகப் பங்களிப்பதற்கான ஒரு வழி முறையாகும்.
அட்டவணை VII (பிரிவு 13) என்பது, நிறுவனங்கள் ஆனது தங்கள் பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் கொள்கைகளில் மேற்கொள்ளக் கூடிய பல நிறுவனச் செயல்பாடுகளைக் குறிப்பிடுகிறது.