பெலெம் தொகுப்பு என்பது பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட 29 பருவநிலை முடிவுகளின் குழுவாகும்.
இது பாரிசு உடன்படிக்கையின் (2015) கீழ் பேச்சுவார்த்தைகளில் இருந்து நடவடிக்கைக்கு நகர்வதில் கவனம் செலுத்துகிறது.
இந்த தொகுப்பில் வலுவான பருவநிலை நிதி, மாற்றம் மற்றும் சிறந்தத் தகவமைப்பு ஏற்பு திட்டமிடலுக்கான படிநிலைகள் உள்ளன.
உலக நாடுகள் தங்கள் பருவநிலை வாக்குறுதிகளைப் பின்பற்றுகின்றனவா என்பதைச் சரிபார்க்க உலகளாவியச் செயல்படுத்தல் கண்காணிப்பு போன்ற செயற் கருவிகளை இது அறிமுகப்படுத்தியது.
இந்தத் தொகுப்பு பாலின உள்ளடக்கம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஆதரிக்கிறது.