பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சாரப் பன்முகத் தன்மையின் உலக தினம் – மே 21
May 23 , 2021 1549 days 541 0
இந்த தினமானது ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
உலகக் கலாச்சாரங்களின் செழுமையைக் கொண்டாடுவதும் அமைதி மற்றும் நிலையான மேம்பாட்டினை அடைவதில் ஒரு உள்ளார்ந்த நேர்மறை மாற்றமாக உலகின் பன்முகத்தன்மை விளங்குவது பற்றிய அதன் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுவதுமே இந்த தினத்தின் நோக்கமாகும்.
2001 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது பாமியானின் (Bamiyan) புத்தர் சிலைகள் 2001 ஆம் ஆண்டில் சிதைக்கப் பட்டதை அடுத்து “கலாச்சாரப் பன்முகத்தன்மை மீதான பிரகடனத்தை” ஏற்றுக் கொண்டது.
பிறகு 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது தனது 57/249 தீர்மானத்தில் மே 21 ஆம் தேதியினைப் பேச்சு வார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சாரப் பன்முகத் தன்மையின் உலக தினமாக அறிவித்தது.