நாட்டில் மின்சாரப் போக்குவரத்தினை ஊக்கப்படுத்துவதற்காக “இந்தியாவில் மின்சார வாகனங்களின் தயாரிப்பு மற்றும் துரிதமாக அவற்றை ஏற்றுக் கொள்ளுதல்” (FAME India - Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India Phase II) திட்டத்தின் நிலை II’ஐ செயல்படுத்துதலுக்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1000 கோடியாகும். இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் மூன்று வருடங்களுக்கு செயல்படுத்தப் படவிருக்கிறது.
இத்திட்டமானது தற்பொழுதுள்ள “FAME INDIA 1” என்பதின் விரிவுபடுத்தப்பட்ட பதிப்பாகும். “FAME INDIA 1” ஆனது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று தொடங்கப்பட்டது.