பேம் 2 (இந்தியாவில் கலப்பு மற்றும் மின்சார வாகனங்களின் தயாரிப்பு மற்றும் துரிதமாக அவற்றை ஏற்றுக் கொள்ளுதல்) திட்டமானது காரீய - அமில மின்கலன்களால் இயங்கும் மின்சார வாகனங்களை தனது திட்டத்தின் வரம்பிலிருந்து நீக்கியுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட மின்கலன்களால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டும் மானியம் வழங்க அனுமதிக்கிறது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து பேம் 2 அல்லது பேம் திட்டத்தின் இரண்டாம் நிலையானது செயல்படுத்தப்படுகின்றது. இது 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேம் இந்தியாவானது தேசிய மின்சாரப் போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது மானியங்கள் வழங்குவதன் மூலம் வணிக ரீதியில் இயங்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் மின்சாரப் போக்குவரத்தை அதிகரிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
பேம் திட்டமானது தொழில்நுட்ப வளர்ச்சி, தேவை உருவாக்கம், சோதனைத் திட்டங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.