பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்குத் தடை விதிக்கும் மசோதாவினைப் பாராளுமன்றம் நிறைவேற்றியது.
இந்த மசோதா "மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகள் (சட்டவிரோதச் செயல்பாடுகளுக்குத் தடை) திருத்த மசோதா, 2022" என்று அழைக்கப்படுகிறது.
இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கவும், அவற்றைப் பறிமுதல் செய்யவும் அல்லது இணைக்கவும் இது மத்திய அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.
2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டமானது பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மட்டுமே தடை விதித்தது.
தற்போதுள்ள சட்டத்தில் 12A என்ற புதிய ஒரு பிரிவினைச் சேர்ப்பதற்கு இந்தத் திருத்த மசோதா முயல்கிறது.