பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கு நிதியளிப்பதைத் தடை செய்வதற்கான மசோதா
April 8 , 2022 1219 days 463 0
பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களுக்கு நிதியுதவி வழங்கச் செய்வதைத் தடை செய்திடவும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் நிதிச் சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கவும், அவற்றைப் பறிமுதல் செய்யவும் அல்லது அவற்றை இணைத்துக் கொள்ளவும் வேண்டி மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடை) சட்டமானது, பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதை மட்டுமே தடை செய்தது.