பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான SOP
February 8 , 2026 209 days 257 0
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) இந்தியாவின் முதல் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) வெளியிட்டது.
2026 குடியரசு தினத்தன்று ஏற்பட்ட பெருமளவிலான உயிரிழப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான இது "Comprehensive Disaster Victim Identification and Management" என்று பெயரிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் ஏர் இந்தியா விபத்து (அகமதாபாத்), ரசாயன தொழிற்சாலை வெடிப்பு (சங்கரெட்டி, தெலுங்கானா), கம்பீரா பாலம் இடிந்த விபத்து (வதோதரா), திடீர் வெள்ளம் (தாராளி, உத்தரகண்ட்) மற்றும் டெல்லி கார் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பெரிய பேரழிவுகளுக்கு இது பொருந்தும்.
இது பின்வரும் நான்கு கட்ட அடையாளச் செயல்முறையை பரிந்துரைக்கிறது: அவை எச்சங்களை மீட்டெடுப்பது, பிரேத பரிசோதனை தரவு சேகரிப்பு, குடும்பங்களிலிருந்து பிரேத பரிசோதனைக்கு முந்தைய தரவு, ஒத்திசைவு மற்றும் முடிவை வெளியிடல்.
பல் மருத்துவப் பதிவுகள் பேரழிவுகளில் இருந்து தப்பித்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதால், தேசிய பல் மருத்துவத் தரவுப் பதிவேடு பரிந்துரைக்கப் படுகிறது.
இந்தச் செயல்முறைத் தரநிலை, பல் மருத்துவம் மற்றும் தொல்லியல் போன்ற தடயவியல் துறைகளை ஒருங்கிணைத்து மனிதாபிமானத் தடயவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, மேலும் இதில் உள்ள இடைவெளிகளைக் கையாள்வதற்காக நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு செயல்பாட்டு வழி காட்டுதல்களை வழங்குகிறது.