பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் மடகாஸ்கர் இணைந்து உள்ளது.
இக்கூட்டணியில் இணைந்துள்ள 30வது நாடாக இது மாறியுள்ளது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றிய போது இக்கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.
பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்பிற்கான கூட்டணி என்பது பல்வேறு நாடுகளின் அரசுகள், ஐக்கிய நாடுகள் அவையின் முகமைகள், பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் மற்றும் நிதிமுறைமைகள், தனியார் துறை மற்றும் அறிவுசார் நிறுவனங்கள் ஆகிய சிலவற்றின் கூட்டிணைவாகும்.
இது நீடித்த நிலையான வளர்ச்சிக்கு ஆதரவாக வேண்டி பருவநிலை மற்றும் பேரிடர் ஆபத்துகளில் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பின் மீதான எதிர்திறனை மேம்படுத்த எண்ணுகின்றது.
இக்கூட்டமைப்பின் தலைமையகமானது இந்தியாவின் புதுடெல்லி நகரில் அமைந்து உள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 23 நாடுகளின் அரசுகள் மற்றும் 7 அமைப்புகள் அடங்கிய 30 உறுப்பினர் நாடுகள் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ளன.