பேரிடர்களைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு
July 8 , 2022 1045 days 472 0
பேரிடர்களைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பினை ‘சர்வதேச அமைப்பாக’ வகைப்படுத்தச் செய்வதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
விதிவிலக்குகள், பாதுகாப்புகள் மற்றும் சலுகைகளை வழங்கச் செய்வதற்காக, பேரிடர்களைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்புடன் தலைமையக ஒப்பந்தத்தில் (HQA) கையெழுத்திடவும் அது ஒப்புதல் அளித்துள்ளது.
1947 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் (சலுகைகள் மற்றும் தடைகள்) சட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப் பட்டது.
இது பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பிற்கு ஒரு சுயாதீனமான மற்றும் சர்வதேச சட்ட ஆளுமையை வழங்கும்.
இதனால் இந்த அமைப்பு சர்வதேச அளவில் அதன் செயல்பாடுகளைச் சரியான முறையிலும் திறம்படவும் செய்ய முடியும்.
2016 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற பேரிடர் அபாயத்தைக் குறைப்பது குறித்த ஆசிய அமைச்சர்கள் மாநாட்டின் போது பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள் கட்டமைப்புக்கான கூட்டமைப்பு குறித்தக் கருத்தாக்கம் பிரதமர் அவர்களால் முன் மொழியப் பட்டது.