TNPSC Thervupettagam

பேரிடர் அபாயக் குறைப்பு அறிக்கை 2025

June 6 , 2025 29 days 57 0
  • 2025 ஆம் ஆண்டிற்கான பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையை (GAR) ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகமானது (UNDRR) வெளியிட்டுள்ளது.
  • 1970 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு காலத்தில், பேரிடர்களினால் ஏற்பட்ட நேரடிச் செலவினங்கள் ஆண்டிற்குச் சராசரியாக 70–80 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன.
  • 2001 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு காலத்தில், வருடாந்திரச் செலவினங்கள் 180–200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணிசமாக அதிகரித்தன.
  • 2025 ஆம் ஆண்டில், மறைமுக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுடன் சேர்க்கப்படும் போது மொத்தப் பேரிடர் செலவினங்கள் தற்போது ஆண்டுதோறும் 2.3 டிரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டன.
  • நகரங்களில் சுமார் 1.2 பில்லியன் குடியிருப்பாளர்கள் புதிதாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்பதோடு மேலும் அவர்களில் 98.4 சதவீதம் பேர் உலகின் தெற்கு நாடுகளில் வசிப்பார்கள்.
  • வெள்ளத்தினால் ஏற்படும் இழப்புகள் 5 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை அதிகரிக்கும்.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலமானது தரமிழக்கும் அபாயத்தில் உள்ளதோடு இது தற்போது 40 சதவீதமாக உள்ளது.
  • கடந்த 30 ஆண்டுகளில் பேரிடர் நிகழ்வுகள் காரணமாக பயிர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியில் 3.8 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது ஆண்டிற்குச் சராசரியாக சுமார் 123 பில்லியன் டாலர்கள் அல்லது உலகளாவிய வேளாண் சார் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% இழப்பிற்குச் சமமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்