பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான கூட்டணியில் இன்று வரை 25 நாடுகள் மற்றும் 7 சர்வதேச அமைப்புகள் உறுப்பினராக இணைந்துள்ளன.
இக்கூட்டணியின் புதிய உறுப்பினர்களாக வங்காளதேசமும் கனடாவும் இணைந்து உள்ளன.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் உரையாற்றிய போது பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.
உள்கட்டமைப்பு, இடர் மேலாண்மை, நிதிவழங்கல், தரநிலைகள் மற்றும் மீட்பு வழிமுறைகள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.