பேரிடர் மேலாண்மை மேற்பார்வை தொடர்பான உயர் மட்டக் குழு
May 6 , 2025 224 days 174 0
2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் தொடர்பான விவகாரங்களை மேற்பார்வையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் (2005 ஆம் ஆண்டு சட்டத்தின் 53) 8Bவது பிரிவின் (2)வது துணைப்பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது கொள்கை சார் முடிவுகளை வழிநடத்தும் மற்றும் பேரிடர் காலங்களில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களிடையே ஒருங்கிணைந்த முயற்சிகளை உறுதி செய்யும்.