TNPSC Thervupettagam

பொதுச் சேவை ஒளிபரப்பு தினம் 2026 - நவம்பர் 12

November 14 , 2026 8 hrs 0 min 25 0
  • 1947 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலி (AIR) நிலையத்திலிருந்து மகாத்மா காந்தி முதலும் மற்றும் இறுதியுமாக நேரலையில் உரையாற்றியதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று ஜன் பிரசாரன் திவாஸ் என்றும் அழைக்கப்படும் பொதுச் சேவை ஒளிபரப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்று தீபாவளியை முன்னிட்டு அகில இந்திய வானொலி (AIR) மூலம் ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரிவினை அகதிகளிடையே மகாத்மா காந்தி உரையாற்றினார்.
  • இந்த வருகையின் போது சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராஜ்குமாரி அம்ரித் கவுர் காந்தியுடன் சென்றிருந்தார்.
  • 2000 ஆம் ஆண்டில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தத் தினத்தை அறிவித்தார், இது 2001 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்தியாவின் பொதுச் சேவை வானொலி ஒலிபரப்பான அகில இந்திய வானொலி (AIR), இந்திய மாநில ஒலிபரப்பு சேவை என்ற பெயர் அகில இந்திய வானொலி என மாற்றப்பட்ட போது, 1936 ஆம் ஆண்டு ஜூன் 8 அன்று நிறுவப்பட்டது.
  • இதற்கு 1956 ஆம் ஆண்டில் ஆகாஷ்வாணி என்று பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்