பொதுச் சேவை வாகனங்களில் VLT மற்றும் அவசரகால பொத்தான்கள்
November 14 , 2018 2454 days 745 0
2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் பதிவு செய்யப்படும் அனைத்து பொதுச் சேவை வாகனங்களிலும் அவசரகால பொத்தான்கள் மற்றும் வாகன இருப்பிட கண்காணிப்பு வசதிகள் (VLT- Vehicle Location Tracking) பொருத்தப்படுவது கட்டாயமாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது பொதுச் சேவை வாகனங்களின் பட்டியல்களில் இருந்து ஆட்டோ ரிக்சா மற்றும் கைவண்டிகளுக்கு விலக்கு அளிக்கிறது.
இது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு VLT சாதனத்தின் தகவல்களும் VAHAN தரவு தளத்தில் அந்தந்த VLT சாதனத்தின் தயாரிப்பாளரால் பதிவேற்றம் செய்யப்படும்.