பொதுத்துறை நிறுவனங்களின் மீதான ஆய்வு 2017-18
January 8 , 2019
2332 days
767
- பல்வேறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல் திறனை ஆய்வு செய்த பொதுத் துறை நிறுவனங்களின் மீதான ஆய்வு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
- இந்த ஆய்வானது மத்திய கனரக தொழிற்சாலை & பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையால் மேற்கொள்ளப்பட்டது.
- இந்தியன் ஆயில் நிறுவனம், ONGC மற்றும் NTPC ஆகியவை 2017-2018 ஆம் ஆண்டில் மிக அதிக லாபம் பெற்ற பொதுத் துறை நிறுவனங்களாகும்.
- தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக BSNL, ஏர் இந்தியா மற்றும் MTNL ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் இழப்புகளை ஏற்படுத்திய நிறுவனங்களாக உள்ளன.
- 2017-18 ஆம் ஆண்டில் 339 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. இதில் 257 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன.
Post Views:
767