நிதி அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனங்கள் துறையானது, பல்வேறு மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களின் செயல்திறன் குறித்த ஆய்வினை ஆண்டிற்கு ஒரு முறை வெளியிடுகிறது.
60வது பொதுத் துறை நிறுவனங்கள் குறித்த ஆய்வானது (2019-20) சமீபத்தில் வெளியிடப் பட்டது.
2020 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்றைய நிலவரப்படி இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் குறித்த ஆய்வின் வரம்பில் 366 மத்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.
இவற்றுள் 256 மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் கீழ் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற வேளையில் 96 மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் கட்டுமானப் பணியிலும் மீதமுள்ளவை மூடப்படும் நிலை/ தீர்வு காண வேண்டிய நிலையிலும் உள்ளன.
குறிப்பு
மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது 10 மகாரத்னா, 14 நவரத்னா மற்றும் 74 மினிரத்னா பிரிவைச் சேர்ந்த மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.