பொதுவான உயர் நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்
September 10 , 2019 2170 days 658 0
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அக்டோபர் 31 ஆம் தேதி முதல் இரண்டு தனித்தனி ஒன்றியப் பிரதேசங்களாக செயல்பட இருக்கின்றன. ஆனால் இவை இரண்டும் ஒரு “பொதுவான உயர் நீதிமன்றத்தையே” கொண்டிருக்கும்.
இது மாநில நீதித் துறை அமைப்பின் இயக்குநர் ராஜீவ் குப்தாவால் தெரிவிக்கப் பட்டது.
மேலும் இந்த இரண்டு ஒன்றியப் பிரதேசங்களுக்கும் மத்திய அரசின் 108 சட்டங்களும் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
இங்கு 164 மாநில சட்டங்கள் ரத்து செய்யப்படும். மேலும் 166 மாநில சட்டங்கள் தொடர்ந்து இந்த இரண்டு ஒன்றியப் பிரதேசங்களுக்கும் பொருந்தும்.