வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் பதிவு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தும் நோக்கில், உத்தரகாண்ட் அரசு பொது சிவில் சட்ட (திருத்த) அவசரச் சட்டம், 2026-ஐ அமல்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 213வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டஇந்த அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
இது தற்போதைய பொது சிவில் சட்டச் சட்டம் (UCC), 2024-இல் உள்ள தெளிவின்மைகளை நீக்கவும், புதிய குற்றவியல் சட்டங்களுடன் இணங்கிச் செல்லவும், நடைமுறை, நிர்வாக மற்றும் தண்டனைச் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்துகிறது.
இந்தத் திருத்தங்கள் டிஜிட்டல்வழி திருமணப் பதிவு, பதிவு தொடர்பான அதிகாரங்கள் மற்றும் மேல்முறையீட்டு வழிமுறையை வலுப்படுத்துகின்றன.
UCC சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, ஒரே ஆண்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப் பட்டுள்ளன.