பொது-தனியார் கூட்டாண்மை மாதிரி அடிப்படையிலான இந்தியாவின் முதல் அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள்
July 18 , 2023 833 days 464 0
OPPO இந்தியா நிறுவனமானது, நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் (AIM) இணைந்து அடல் மேம்பாட்டு ஆய்வகத்தினை (ATL) கேரளாவில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையானது, பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் அடிப்படையிலான இந்தியாவின் முதல் அடல் மேம்பாட்டு ஆய்வகமானது நிறுவப்பட உள்ளதைக் குறிக்கிறது.
இந்த முன்னெடுப்பானது, ஆற்றல்மிக்க எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தயாரான தொழிலாளர் வளங்களை உருவாக்குவதையும், இளையோர்களிடையேத் தொழில் முனைவு மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வரையில், இந்தியாவில் 35 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அரசாங்க மானியங்கள் மூலம் 10,000 அடல் மேம்பாட்டு ஆய்வகங்கள் நிறுவப் பட்டுள்ளன.