பொது விநியோக திட்டத்தின் கீழ் மாதவிடாய் பயன்பாட்டுப் பொருட்கள்
November 22 , 2025 6 days 43 0
ரேஷன் கடைகள் மூலம் மாதவிடாய் காலப் பயன்பாட்டு துணிகளை வழங்குவது குறித்த பொது நல வழக்கிற்கு (PIL) பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசைக் கோரியுள்ளது.
இந்த பொதுநல வழக்கு, பொது விநியோக அமைப்பு (PDS) மூலம் இலவச அல்லது மானிய விலையில் மாதவிடாய் காலப் பயன்பாட்டுத் துணிகளை வழங்குவது பற்றியதாகும்.
மாதவிடாய் கால வறுமை எனப்படும் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பல பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடைகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு குறைந்தது ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் 25 மாதவிடாய் காலப் பயன்பாட்டு துணிகளை /சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும் என்று அது கோரியது.
மாதவிடாய் காரணமாக அழுக்குத் துணிகள், காகிதம், திசுக்கள், கந்தல்கள் மற்றும் இலைகளைப் பயன்படுத்துவது 'மாதவிடாய் வறுமை' என்று அழைக்கப் படுகிறது.