TNPSC Thervupettagam

பொன்னிற குள்ளநரி வளங்காப்புத் தூதர்கள் திட்டம்

December 3 , 2025 22 days 91 0
  • தென்காசி வனப் பிரிவு ஆனது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 'பொன்னிற குள்ளநரி வளங்காப்புத் தூதர்கள்' திட்டத்தைத் தொடங்குகிறது.
  • கட்டுமானப் பணிகள் மற்றும் புதர்கள் மற்றும் காடுகள் இழப்பு காரணமாக பொன்னிற நரிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றைப் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • மாணாக்கர்கள் இதில் பயிற்சி பெற்று, பொன்னிறக் குள்ள நரிகளைப் பாதுகாப்பது மற்றும் காயமடைந்த விலங்குகள் காட்டிற்குத் திரும்ப உதவுவது குறித்து விழிப்பு ணர்வைப் பரப்புவார்கள்.
  • இந்தத் திட்டம் கீரி, எறும்பு திண்ணிகள், ஆமை, பாம்புகள் மற்றும் உடும்புகள் போன்ற பிற சிறிய வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வையும் உள்ளடக்கியது.
  • இந்த மாதிரியானது கிராமவாசிகளை முன் எச்சரிக்கைகள் மற்றும் காடுகளுக்குள் உணவு உருவாக்கத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் மனித-யானை மோதலைக் குறைத்து உள்ள 'யானைகளின் நண்பர்கள்' திட்டத்தைப் பின்பற்றி தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்