TNPSC Thervupettagam

பொருளாதாரக் கணக்கெடுப்பு 2027

December 9 , 2025 3 days 67 0
  • 2026–27 ஆம் ஆண்டு இரண்டு கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு, இந்தியா தனது 8வது பொருளாதாரக் கணக்கெடுப்பை (EC) 2027 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.
  • பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆனது சரக்குகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதில் அல்லது விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கிடுகிறது.
  • பொருளாதாரக் கணக்கெடுப்பு, மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்குநரகங்களுடன் இணைந்து புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MOSPI) நடத்தப்படுகிறது.
  • 8வது பொருளாதாரக் கணக்கெடுப்பின் தரவு, நிறுவனங்களின் ஒருங்கிணைந்த தரவுத் தளமான புள்ளிவிவர வணிகப் பதிவேட்டை (SBR) உருவாக்கப் பயன்படுத்தப் படும்.
  • துல்லியமான பொருளாதார புள்ளி விவரங்களுக்காக செயலில் உள்ள மற்றும் மூடப் பட்ட நிறுவனங்களை அடையாளம் காண SBR உதவும்.
  • 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது, 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்தியாவின் 16வது பத்தாண்டுக் கணக்கெடுப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்