2026–27 ஆம் ஆண்டு இரண்டு கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு, இந்தியா தனது 8வது பொருளாதாரக் கணக்கெடுப்பை (EC) 2027 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.
பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆனது சரக்குகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதில் அல்லது விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் கணக்கிடுகிறது.
பொருளாதாரக் கணக்கெடுப்பு, மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச பொருளாதாரம் மற்றும் புள்ளி விவர இயக்குநரகங்களுடன் இணைந்து புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் (MOSPI) நடத்தப்படுகிறது.
8வது பொருளாதாரக் கணக்கெடுப்பின் தரவு, நிறுவனங்களின் ஒருங்கிணைந்த தரவுத் தளமான புள்ளிவிவர வணிகப் பதிவேட்டை (SBR) உருவாக்கப் பயன்படுத்தப் படும்.
துல்லியமான பொருளாதார புள்ளி விவரங்களுக்காக செயலில் உள்ள மற்றும் மூடப் பட்ட நிறுவனங்களை அடையாளம் காண SBR உதவும்.
2027 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது, 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்தியாவின் 16வது பத்தாண்டுக் கணக்கெடுப்பாகும்.