TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வு 2025/26 - முக்கிய அம்சங்கள்

February 1 , 2026 13 days 146 0
  • 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலையறிக்கைக்கு முன்னதாக, 2026 ஜனவரி 29 அன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சி விகிதம் முந்தைய மதிப்பீடுகளில் இருந்த 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி திருத்தப்பட்டுள்ளது.
  • 2026-27 நிதியாண்டில் பொருளாதாரம் 6.8–7.2 சதவீதம் வளரும் என கணிக்கப் பட்டு உள்ளது.
  • இந்தியா தொடர்ந்து நான்காவது ஆண்டாக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாகத் திகழ்கிறது.
  • உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை குறித்து எச்சரிக்கும் இந்த ஆய்வு, 2026-ஆம் ஆண்டில் 2008-ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியை விட மோசமான ஒரு நெருக்கடி ஏற்படுவதற்கு 10-20% வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடுகிறது.
  • 2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த உலகளாவிய சூழ்நிலை என்பது, "2025-ஆம் ஆண்டைப் போன்றே இயல்பு நிலை" என்பதாகவே உள்ளது இருப்பினும் நிலைமைகள் மிகவும் பலவீனமாகவே உள்ளன.
  • பலவீனமான உலகளாவியப் பொருளாதாரச் சூழலில் இந்தியா ஒரு “பொருளாதாரச் செயல்பாட்டின் சோலை” என்று வர்ணிக்கப்படுகிறது.
  • பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு நிலைப் படுத்தப் பட்டுள்ளது; ஏப்ரல்-டிசம்பர் 2025 காலகட்டத்தில் சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 1.7% ஆக இருந்தது என்பதோடு இது இந்தத் தொடர் தொடங்கியதிலிருந்து மிகக் குறைந்த அளவு ஆகும்.
  • தனிநபர் இறுதி நுகர்வுச் செலவு (PFCE) 2026 நிதியாண்டில் 7% வளர்ச்சி கண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.5% ஆக இருந்தது, இது 2023 நிதியாண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த பங்காகும்.
  • வேளாண்மை மற்றும் சேவைத் துறைகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரியப் பங்களிப்பாளர்களாகத் தொடர்கின்றன.
  • 2024-25 நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி 3,577.3 லட்சம் மெட்ரிக் டன்களாக (LMT) உயர்ந்தது என்பதோடு இது முந்தைய ஆண்டை விட 254.3 LMT அதிகமாகும் என்ற நிலையில் மேலும் இந்த வளர்ச்சிக்கு அரிசி, கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சிறு தானியங்கள் முக்கியக் காரணமாகும்.
  • இந்திய அரசின் மூலதனச் செலவினம், 2018 நிதியாண்டில் 2.63 லட்சம் கோடியில் இருந்து 2026 நிதியாண்டில் (வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள்) 11.21 லட்சம் கோடியாக, கிட்டத்தட்ட 4.2 மடங்கு அதிகரித்துள்ளது, அதே சமயம் 2026 நிதியாண்டில் பயனுறு மூலதனச் செலவினம் 15.48 லட்சம் கோடியாக உள்ளது.
  • தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு 60% விரிவடைந்து, 2014 நிதியாண்டில் 91,287 கி.மீ. ஆக இருந்தது, 2026 நிதியாண்டில் (டிசம்பர் வரை) 1,46,572 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
  • செயல்பாட்டில் உள்ள விரைவு வழித்தடங்கள் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்து, 2014 நிதியாண்டில் 550 கி.மீ. ஆக இருந்தது, 2026 நிதியாண்டில் (டிசம்பர் வரை) 5,364 கி.மீ ஆக உள்ளது.
  • மார்ச் 2025 நிலவரப்படி, இரயில்வே வலையமைப்பு 69,439 கிலோமீட்டர்களை எட்டியது, மேலும் அக்டோபர் 2025-க்குள் 99.1% தடம் மின்மயமாக்கப்பட்டது.
  • இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக மாறியுள்ளது; விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ல் 74-லிருந்து 2025-ல் 164 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியா சுயாதீன விண்கலமிணைப்புப் பரிசோதனையை (SpaDeX) வெற்றிகரமாகச் செய்து, அவ்வாறு செய்த உலகின் நான்காவது நாடாக மாறியது.
  • சேவைகள் ஏற்றுமதியால் உந்தப்பட்டு, 2025 நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 6.1% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்து, சாதனை அளவான 825.3 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • வங்கித் துறையின் சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது; செப்டம்பர் 2025ல் மொத்த வாராக் கடன் (GNPA) 2.2% ஆகவும், நிகர வாராக்கடன் (Net NPA) 0.5% ஆகவும் இருந்தது.
  • 2026 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% என்ற இலக்குக்கு ஏற்ப உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டில் இந்திய ரூபாய் மதிப்பு மோசமாக வீழ்ச்சியுற்றது என்ற நிலையில், இது நாட்டின் வலுவான பொருளாதார அடிப்படைகளைப் பிரதிபலிக்கவில்லை.
  • இந்தியா ஒரு பெரிய உள்நாட்டுச் சந்தை, வலுவான அந்நியச் செலாவணி இருப்புக்கள் மற்றும் நம்பகமான அளவிலான மூலோபாய சுயாட்சி ஆகியவற்றால் பயனடைகிறது என்ற நிலையில் நிதி ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக இடையகங்களை வழங்குகிறது.
  • அதிகரித்து வரும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்றத் தன்மைகளுக்கு மத்தியில், சுதேசியை ஒரு சட்டப்பூர்வமான கொள்கைக் கருவியாக இந்த கணக்கெடுப்பு ஆதரிக்கிறது.
  • இது இறக்குமதி மாற்றீடு, மூலோபாய மீள்தன்மை மற்றும் மூலோபாய இன்றியமையாத தன்மையை நீண்ட கால முன்னுரிமைகளாக வலியுறுத்துகிறது.
  • வேளாண்மை, உற்பத்தி மற்றும் சேவைகள் ஆகியவை உந்துதலைத் தக்கவைக்க ஒன்றாக வளர வேண்டும்.
  • புதிய தொழிலாளர் குறியீடுகளானது, கிக் (Gig) மற்றும் இணையம் மூலம் சேர்க்கப் படும் சேவை வழங்கும் தொழிலாளர்களை அங்கீகரிக்கின்றன, சமூகப் பாதுகாப்பு மற்றும் சலுகைகளை விரிவுபடுத்துகின்றன, மேலும் முறையான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • காலநிலைசார் நிதித்தேவை ஒரு முக்கியத் தடையாகவே நீடிக்கிறது என்ற நிலையில் காலநிலை நடவடிக்கை இப்போது இந்தியாவின் வளர்ச்சி உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
  • குழந்தைகளிடையே டிஜிட்டல் கருவிகளுக்கு அடிமையாகும் பழக்கத்தைத் தடுக்க சமூக ஊடகங்களுக்கான வயது அடிப்படையிலான வரம்புகளையும், ஆன்லைன் கற்பித்தலைக் குறைப்பையும் இந்த கணக்கெடுப்பு பரிந்துரைக்கிறது.
  • அதிகரித்து வரும் குழந்தைப் பருவ உடல் பருமனை எடுத்துக்காட்டி, காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் அது பரிந்துரைக்கிறது.
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் அதன் அசல் நோக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டே, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் சீரமைக்கப் படுவதற்கு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியிருக்கலாம்.
  • செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவின் தாமதமான நுழைவு ஒரு நன்மையை வழங்குகிறது என்ற நிலையில் இது பொது நோக்கங்களுடன் சீரமைக்கப் பட்ட, வளத் திறனுள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஏற்பை சாத்தியம் ஆக்குகிறது.
  • இந்த ஆய்வறிக்கை நகரமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழல், உள் கட்டமைப்பு, தொழில், கல்வி மற்றும் மூலோபாய மீள்திறன் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய 16 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்