கனடாவின் பிரேசர் நிறுவனத்துடன் இணைந்து சிவில் சமூக மையத்தினால் (CCS - Centre for Civil Society) 2018 ஆம் ஆண்டிற்கான பொருளாதார சுதந்திரக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் உலகின் 162 நாடுகளில் இந்தியா 96 வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த தரவரிசையில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான தரவரிசையில் இந்தியா சமநிலையில் உள்ளது.
இரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்தத் தரவரிசையில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. இரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் முறையே 87வது மற்றும் 94வது இடத்தைப் பிடித்துள்ளன. இந்தத் தரவரிசைப் பட்டியலில் சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முறையே 108 மற்றும் 144வது இடத்தைப் பிடித்து இந்தியாவை விட பின்னிலையில் உள்ளன.
2017 ஆம் ஆண்டிற்கான பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 98வது இடத்தில் இருந்தது. 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தக் குறியீடானது 2016 ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
இந்தக் குறியீட்டில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை மீண்டும் பிடித்துள்ளன.