2025-26 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கூடுதல் மானியக் கோரிக்கைகளுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிலைத்தன்மை நிதியை (ESF) முன்மொழிந்துள்ளார்.
உலகளாவிய நெருக்கடிகள், திடீர் பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளுக்கு இந்தியா விரைந்து பதிலளிக்க இந்த நிதி உதவும்.
ஒரு நிதியாண்டிற்கு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்ஜெட் ஒரு குறிப்பிட்ட சேவைக்குப் போதுமானதாக இல்லாதபோது 'கூடுதல் மானியக் கோரிக்கைகள்' அவசியமாகின்றன.
குடியரசுத் தலைவர் இந்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிப்பார் என்பதோடு இவை இந்த நிதியாண்டு முடிவதற்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் 115-வது சரத்தின் கீழ் கூடுதல் மானியக் கோரிக்கைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.