பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு
November 9 , 2022 1018 days 447 0
பொதுத் துறை, பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியப் பிரிவினருக்கு (EWS) 10 சதவீத அளவில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான விதிமுறையினை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கானது 103வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் செல்லுபடித் தன்மையினை எதிர்த்துப் பதிவு செய்யப்பட்டது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவை முறையே 2019 ஆம் ஆண்டு ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தன.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீடானது, பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) தற்போதுள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டை விட அதிகமாக உள்ளது.