பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசுக் கடன் – தமிழ்நாடு
May 11 , 2024 442 days 442 0
பொருளாதார நிபுணர் C. ரங்கராஜன் மற்றும் சென்னை பொருளாதாரக் கல்லூரியைச் சேர்ந்த K.R. சண்முகம் ஆகியோர், மாநிலப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வினை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டின் அரசுக் கடனின் வளர்ச்சி "எந்தவித பாதகமான பாதிப்பினையும் ஏற்படுத்த வில்லை "சாதகமான நிலையிலும் இல்லை".
இந்தத் தகவல் ஆனது பொதுக் கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதம் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்திய, ஆனால் "குறிப்பிடத்தக்க தாக்கமாக இல்லாத" 2005-06 முதல் 2022-23 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தினைக் குறிப்பாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்காலத்தில், "அதிக கடன் விகிதம் என்பது வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கலாம்" என்று எச்சரித்துள்ளது.
"கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உள்ள சரிவு வளர்ச்சியைத் தூண்டலாம்" என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் பதிவான விகிதத்தின் பாங்கினைப் பகுப்பாய்வு செய்தால், 2016-17 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 20 சதவீதத்தினைத் தாண்டியுள்ளது.
2017 ஆம் ஆண்டில் நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை (FRBM) மறு ஆய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையான நிலை இதுவாகும்.