பொறியாளர்கள் தினம் – செப்டம்பர் 15
September 17 , 2021
1435 days
572
- இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான மோக்ச குண்டம் விஷ்வேஷ்வரய்யா அவர்களுக்குக் கௌரவம் அளிக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- இவர் மைசூர் நகரில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டின் தலைமைப் பொறியாளர் ஆவார்.
- ஹைதராபாத் நகரின் வெள்ளப் பாதுகாப்பு அமைப்பின் தலைமைப் பொறியாளர்களில் ஒருவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
- 1903 ஆம் ஆண்டில் புனேயிலுள்ள கதக்வாசலா நீர்த்தேக்கத்தில் தானியங்கு வெள்ளத் தடுப்பு மதகுகளை இவர் வடிவமைத்தார்.
- இத்தினத்திற்கான கருத்துரு, “நலமானக் கிரகத்திற்கான பொறியியல் – யுனெஸ்கோவின் பொறியியல் அறிக்கையினைக் கொண்டாடுதல்” என்பதாகும்.
- இந்திய அரசு 1968 ஆம் ஆண்டில் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினத்தை பொறியியலாளர் தினமாக அறிவித்தது.
- அவர் நவீன மைசூரின் தந்தை என அறியப் படுகின்றார்.
- இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் மற்றும் இந்தியாவினை மீள்கட்டமைத்தல் போன்ற பலதரப்பட்ட புத்தகங்களையும் அவர் எழுதி உள்ளார்.

Post Views:
572