பொறுப்பு காவல் துறை தலைமை இயக்குநர் நியமனம்
September 4 , 2025
2 days
40
- மூத்த இந்தியக் காவல் பணி அதிகாரி G. வெங்கட்ராமன் தமிழகத்திற்கான காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சங்கர் ஜிவாலுக்கு அடுத்தப்படியாக, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று அவர் பதவியேற்றார்.
- ஒரு வழக்கமான காவல்துறை தலைமை இயக்குநர் நியமிக்கப்படும் வரை அவர் இப்பதவியில் இருப்பார்.
- ஒரு வழக்கமான காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் ஆனது, 2018 ஆம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்.
- தமிழ்நாடு அரசு எட்டு காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்கான தகுதியுள்ள அதிகாரிகளின் பட்டியலை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியுள்ளது.
- முதல் மூன்று பெயர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் பட்டியலிடப் பட்டு இறுதி நியமனத்திற்காக மாநில அரசிடம் திருப்பி அனுப்பப்படும்.
- சமீபத்திய ஆண்டுகளில் காவல்துறை தலைமை இயக்குநரை நியமிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழ்நாடு உடனடியாகப் பின்பற்றாதது இதுவே முதல் முறையாகும்.
- 2018 ஆம் ஆண்டில், பிரகாஷ் சிங் வழக்கைத் தொடர்ந்து K. இராமானுஜம் நிலையான இரண்டு ஆண்டு பதவிக் காலத்துடன் பதவியில் நியமிக்கப்பட்டார்.
- புதிய காவல்துறை தலைமை இயக்குநருக்கான முன்மொழிவை UPSC ஆணையத்திற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் தற்போதைய தற்காலிக நியமனத்திற்கு காரணமாக அமைந்தது.

Post Views:
40