பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்கான போதைப் பொருள் (கஞ்சா)
October 18 , 2018 2485 days 807 0
பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்கான முதல் போதைப் பொருள் (கஞ்சா) (சட்டப்பூர்வமான முறையில்) கனடாவின் நியூபவுண்ட்லேன்ட் என்ற கிழக்குப் பகுதி தீவில் வாங்கப்பட்டது.
உருகுவே நாட்டிற்குப் பிறகு பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்காக போதைப் பொருளை (கஞ்சா) சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கும் வைத்திருப்பதற்கும் அனுமதித்த இரண்டாவது நாடாக கனடா ஆகியுள்ளது.
கனடாவில் 2001ம் ஆண்டு முதல் மருத்துவ ரீதியிலான மரிஜூவானா என்ற பொருள் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கனடாவில் 1923 ஆம் ஆண்டில் கஞ்சாவை வைத்திருத்தல் என்பது முதலில் குற்றமாகக் கருதப்பட்டாலும் 2001 ஆம் ஆண்டு முதல் அதன் மருத்துவப் பயன்பாடு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.