பொழுதுபோக்கு ரீதியிலான கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கல் – ஜெர்மனி
April 8 , 2024 495 days 368 0
கடந்த பத்து ஆண்டுகளில் 12 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களின் போதைப் பொருள் (கஞ்சா) நுகர்வு இரட்டிப்பாகியுள்ளது.
எனவே, ஜெர்மன் நாட்டுப் பாராளுமன்றமானது கஞ்சா பயன்பாட்டினைப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சேர்த்து பகுதியளவுச் சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
இளம் பருவத்தினர் பொது வெளியில் இருக்கும் போது 25 கிராம் வரையும், வீட்டில் 50 கிராம் வரையும் வைத்துக் கொள்ள இச்சட்டம் அனுமதிக்கிறது.
ஒரு நபர் மூன்று கஞ்சா (மரிஜுவானா) செடிகளை வீட்டில் வளர்க்கலாம்.
ஆனால் வீட்டில் விளையும் கஞ்சா பொருட்களை வேறு ஒருவருக்கு விற்க முடியாது.