TNPSC Thervupettagam

போகிபீல் பாலம் திறப்பு

December 25 , 2018 2364 days 739 0
  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் மற்றும் நல்லாட்சித் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று போகிபீல் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • இந்திய ரயில்வேயால் கட்டப்பட்ட இந்த பாலமானது 4.9 கி.மீ. நீளமுடையது ஆகும். இது இந்தியாவின் மிகவும் நீண்ட மற்றும் ஆசியாவின் 2-வது நீளமான சாலை மற்றும் ரயில் பாலமாகும்.
  • இதுவரை 4.62 கி.மீ. நீளமுடைய கேரளாவில் உள்ள வேம்பநாடு ரயில்பாலம் இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாலமாக இருந்தது.
  • இதுவே நாட்டின் முழுமையாக பற்ற வைத்து கட்டப்ப்பட்ட ஒரே பாலமாகும். மேலும் முதன்முறையாக ஐரோப்பாவின் குறியீடுகள் மற்றும் பற்றவைப்புத் தரநிலைகள் ஆகியவை இதற்காக பின்பற்றப்பட்டுள்ளது. இது 120 வருடங்கள் ஆயுளைக் கொண்டது.
  • இது இரண்டு அடுக்குகளைக் கொண்ட பாலமாகும். இது இரண்டு ரயில் பாதைகளைக் கீழ் தளத்திலும் 3 தட சாலைகளை மேல் தளத்திலும் கொண்டுள்ளது.
  • அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திராவின் தெற்கு ஆற்றங்கரையையும் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோர தீமாஜி மாவட்டத்தின் சிலாபத்தாரையும் இப்பாலம் இணைக்கின்றது.
  • இந்த பாலத்தின் மேல் மட்ட 3 தடங்களும் விமானப் படையின் மூன்று தரையிறக்க பாதைகளாக செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்