போக்குவரத்து ரேடார் கருவி சரிபார்ப்புக்கான புதிய விதிகள்
April 23 , 2025 128 days 192 0
நுகர்வோர் விவகார அமைச்சகம் ஆனது, போக்குவரத்து ரேடார் கருவிகளின் கட்டாய சரிபார்ப்பு மற்றும் முத்திரையிடல் செயல்முறைகளை மேற்கொள்வதற்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தின் மீதான துல்லியத்தினை மேம்படுத்துவதற்காக ஜூலை 01 ஆம் தேதி முதல் இது அமல்படுத்தப்படும்.
இந்தப் புதிய விதிகளானது 2011 ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அளவியல் (பொது) விதிகளின் கீழ் வருகின்றன.
இது சாலைகளில் வாகன வேகத்தினை அளவிடுவதற்காகப் பரவலாகப் பயன்படுத்தப் படும் "நுண்ணலை டாப்ளர் ரேடார் கருவிகளுக்கும்" பொருந்தும்.