TNPSC Thervupettagam

போக்சோ விரைவு நீதிமன்றங்கள்

July 27 , 2019 2117 days 814 0
  • போக்சோ வழக்குகளுக்காக 60 நாட்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்த நீதிமன்றங்கள் மத்திய அரசினால் நிதியளிக்கப் படவிருக்கின்றன.
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழ் 100 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படுகின்றன.
  • இந்திய உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்த பொது நல வழக்கின் மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் ஏறத்தாழ 24,212 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • ஆனால் 911 வழக்குகள் மட்டுமே விசாரணை நீதிமன்றங்களினால் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப் படவிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்