போஜ்ஷாலா-கமல் மௌலா மசூதி வளாகம் – மத்தியப் பிரதேசம்
July 23 , 2024 347 days 508 0
சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா-கமல் மௌலா மசூதி வளாகம் குறித்த அறிவியல் ஆய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்துள்ளது.
இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கை போஜ்ஷாலா முன்னொரு காலத்தில் போஜ அரசரால் நிறுவப்பட்ட ஒரு முக்கிய கல்வி மையமாக இருந்தது என கருதுகிறது.
இந்து சமூகம் ஆனது 11 ஆம் நூற்றாண்டின் நினைவுச் சின்னமான போஜ்ஷாலாவை வாக்தேவியின் (சரஸ்வதி தேவி) கோயிலாகக் கருதுகிறது.
முஸ்லிம் தரப்பினர் அதனை கமால் மௌலா மசூதி என்று அழைக்கின்றனர்.
கடந்த 21 ஆண்டுகளாக, இந்துக்கள் போஜ்சாலாவில் வழிபட அனுமதிக்கப் படுகின்ற அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்தவும் அனுமதிக்கப் படச் செய்கிறார்கள்.
சூஃபி துறவி மௌலா கமாலுதீன் சிஷ்தி, நிஜாமுதீன் அவுலியாவின் சீடர் ஆவார்.
இவர் 1291 ஆம் ஆண்டளவில் சுமார் 40 ஆண்டுகள் வரை இங்கு உபதேசம் செய்தார்.