TNPSC Thervupettagam

போடோலேண்ட் பகுதியின் பட்டாம்பூச்சிகள்

July 7 , 2026 7 hrs 0 min 27 0
  • அஸ்ஸாமில் உள்ள போடோலேண்ட் பிராந்திய பகுதியின் (BTR) பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தும் சிறு புத்தகத்தை அஸ்ஸாம் வனத்துறை வெளியிட்டது.
  • 3,653 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட போடோலேண்ட் வனப்பகுதி, அஸ்ஸாமில் பதிவுசெய்யப்பட்ட 620 பட்டாம்பூச்சி இனங்களில், பல அரிய, ஓரிடத்திற்குரிய அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு மட்டுமே உரிய மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்கள் உட்பட 346 பட்டாம்பூச்சி இனங்களுக்கு ஆதரவளிக்கிறது.
  • இப்பகுதி இந்தோ-மலேய, கிழக்கு இமயமலை மற்றும் இந்தோ-கங்கை உயிரியல் புவியியல் மண்டலங்களின் சந்திப்புப் புள்ளியில் அமைந்துள்ளதால், இது வடகிழக்கு இந்தியாவின் வளமான பட்டாம்பூச்சி வாழிடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
  • பட்டாம்பூச்சிகள் முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர்களாகவும், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாகவும், வனப் பல்லுயிர் மற்றும் உணவு வலைகளின் ஆதரவாளர்களாகவும் உள்ளன.
  • இந்தச் சிறு புத்தகம் போடோலேண்ட் பல்கலைக்கழகம், வடகிழக்கு பட்டாம்பூச்சி சந்திப்பு வலையமைப்பு மற்றும் பிற பிராந்திய பட்டாம்பூச்சி நிபுணர்களின் பல ஆண்டு கால அறிவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்