போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணியின் (National Democratic Front of Bodoland - NDFB) ஒன்பது பிரிவுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, போடோலாந்து பிராந்தியப் பகுதி மாவட்டமானது உள்ளூர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளைக் கொண்டிருக்கின்றது.
இருப்பினும், வெளிநபர்கள் இந்தப் பகுதியில் பணியாற்றுவதற்கு "அனுமதி" பெற வேண்டும்.
இந்த ஒப்பந்தமானது மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, அசாம் மாநில முதல்வரான சர்பானந்தா சோனோவால் மற்றும் NDFBயின் தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தமானது இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் போடோலாந்து பிராந்திய ஆணையத்தை (BTC - Bodoland Territorial Council) உருவாக்க வழிவகை செய்துள்ளது.
போடோ பற்றி
போடோ என்பது அசாமில் உள்ள ஒரு மிகப்பெரிய பழங்குடியின சமூகமாகும். இது அம்மாநில மக்கள் தொகையில் 5 - 6 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
BTC ஆனது தற்பொழுது அசாமில் சிராங், கோக்ராஹர், பாஸ்கா மற்றும் உடல்குரி ஆகிய 4 மாவட்டங்களை நிர்வகிக்கின்றது.
இந்தப் பகுதிகள் போடோலாந்து பிராந்தியப் பகுதி மாவட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.