போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக (NCB) அறிக்கை 2025
June 30 , 2026 7 days 131 0
இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புதிய செயற்கை போதைப்பொருள் சவால்களை முன்னிலைப்படுத்தும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) 2025-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை மற்றும் போதைப்பொருள் தடுப்பு மீதான தொலைநோக்கு ஆவணம் (2026-2029) ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
உலகளவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 316 மில்லியனை எட்டியுள்ளது; இது கடந்த தசாப்தத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க எழுச்சியைக் காட்டுகிறது.
பொற்பிறை மற்றும் முக்கோணப் பொன்பூமி ஆகிய போதைப்பொருள் உற்பத்தி மண்டலங்களுக்கு இடையே அமைந்துள்ளதால் இந்தியா அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது.
கடத்தல்காரர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் பணமோசடிக்குப் பெருமளவில் டார்க்நெட்/இருண்டவலை தளங்கள், கிரிப்டோகரன்சி/மறைக்குறியீட்டு நாணயம் மற்றும் டெலிகிராம், வாட்ஸ்அப்/புலனம் போன்ற செய்தியிடல் செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இணைய ரோந்து மற்றும் முகமைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பில் அதிக கவனம் செலுத்தியதன் மூலம், 2025-ஆம் ஆண்டில் NCB 702 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
தொலைநோக்கு ஆவணம் (2026-2029) என்பது அமலாக்கம், முன்னோடிக் கட்டுப்பாடு, தேவையைக் குறைத்தல் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டது.