கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள அசல் போம்காய் நெசவு பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒடிசா ஒரு புத்துயிர் திட்டத்தை தொடங்கியுள்ளது.
"நலிவடைந்து வரும் பொருட்களுக்குப் புத்துயிர் அளித்தல் (பருத்தி போம்காய் புடவை)" என்ற தலைப்பிலான இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
சுபர்ணாபூர் என்பது போம்காய் நெசவுடன் தொடர்புடைய மற்றொரு முக்கியமான மையமாகும்.
பொருட்கள் புவிசார் குறியீடுகள் சட்டம், 1999-இன் கீழ் போம்காய் புடவை புவிசார் குறியீடு (GI) அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
போம்காய் புடவைகளின் பாரம்பரிய வடிவமைப்புகள், வேலைப்பாடுகள் மற்றும் வண்ண வடிவங்களை ஆவணப்படுத்துவதும் இந்தப் புத்துயிர் திட்டத்தில் அடங்கும்.
நோக்குநிலை நிகழ்ச்சிகள் மற்றும் கைத்தறி குழும ஆதரவு மூலம் இளம் கை வினைஞர்களுக்கு பாரம்பரிய நெசவு நுட்பங்களில் இந்தத் திட்டம் பயிற்சி அளிக்கிறது.
போம்காய் கிராமத்தில் தற்போது இரண்டு நெசவு குடும்பங்கள் மட்டுமே அசல் போம்காய் நெசவு பாரம்பரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றன.