TNPSC Thervupettagam

போரின் போது பாதிக்கப்பட்டோருக்கான இராணுவ நல நிதியம்

October 9 , 2019 2127 days 763 0
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமானது போரின் போது பாதிக்கப்பட்ட முப்படையைச் சேர்ந்தவர்களின் உற்றோர் உறவினர்களுக்கான (NoK – Next of Kin) நிதித் தொகையை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியுள்ளது.
  • இந்த நிதியானது போரின் போது பாதிக்கப்பட்டோருக்கான இராணுவ நல நிதியத்தின் (Army Battle Casualties Welfare Fund - ABCWF) கீழ் வழங்கப்பட இருக்கின்றது.
  • ABCWF ஆனது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் கீழ் 2017 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • NoK மற்றும் போரில் பலியானோரின் குழந்தைகளின் நலனுக்காக தற்போதுள்ள பல்வேறு திட்டங்களுடன் இந்த நிதியுதவித் திட்டமும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்