போர்ப்ஸ் 2017ன் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படத்தின் நடிகர்கள்
December 28 , 2017 2682 days 1034 0
பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் (Vin Diesel) நடித்த “பேட் ஆஃப் பியூரியஸ்“ (Fate of furious) திரைப்படம் உலக அளவில் 1.6 பில்லியன் டாலர்களை வசூலித்ததை அடுத்து, போர்ப்ஸ் இதழின் 2017- ஆம் ஆண்டின் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படத்தின் (Top grossing actor) நடிகராக வின் டீசல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வரிசையில் “தி ராக் “என்றறியப்படும் டுவைன் ஜான்சன் நடித்த ஓர் ஹாலிவுட் திரைப்படம் 1.5 பில்லியன் டாலர்கள் வசூலித்ததை தொடர்ந்து அவர் இந்த இதழின் வெளியீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை கால் கடோட் (Gal Gadot) நடித்த “வொண்டர் உமன் “(Wonder Woman) திரைப்படம் உலகளவில் 1.4 பில்லியன் வசூலித்ததைத் தொடர்ந்து அவர் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.