அசாம் ரைபிள்ஸ் படையானது நாகாலாந்தில் ஒரு ஒருங்கிணைந்த போர் நினைவிடத்தை கட்டமைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை எதிர்த்து நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த 357 வீரர்களுக்காக இந்த நினைவிடமானது கட்டப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் அமைந்துள்ள இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது நினைவிடம் இதுவாகும்.
நாகாலாந்து மாநிலமானது கோஹிமாவில் புகழ்பெற்ற இரண்டாம் உலகப் போரின் கல்லறையான “வீர் சம்ருதியையும்” கொண்டுள்ளது.
அஸ்ஸாம் ரைபிள்ஸ்
அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையானது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
இது இந்தியாவின் மிகப் பழமையான துணை ராணுவப் படையாகும்.
2000 ஆம் ஆண்டு முதல், இந்தப் படையானது இந்திய அரசின் "ஒரு எல்லை ஒரு படை" என்ற கொள்கையின் கீழ் இந்தோ - மியான்மர் எல்லையை பாதுகாத்து வருகின்றது.